Feb 10, 2018
945 Views

பேஸ்புக்கில் பணம் கிடைக்குமா அப்படிங்கிற கேள்விக்கு விடை கிடைச்சாச்சு

Written by

பேஸ்புக் வழியா பணம் சம்பாதிக்க முடியுமா? முடியும்…..அது எப்படினுதான் விரிவாக பார்க்க போரோம்.

கண்டிப்பா இந்த கட்டுரை முடிவதற்குள் அதைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் நீங்கள் அறிய செய்கிறேன்.

அனைவரும் நமது அன்றாட நாட்கள் பயன்படுத்திகிட்டு வர ஒரு சமூக வலைதளம் தான் பேஸ்புக்.அன்றைய காலத்தில் தொடர்பு கொள்வதற்காக கேட்டது தொலைபேசி எண்களைத்தான் ஆனால் இன்றோ அவர்களைத் தொடர்பு கொள்ள பேஸ்புக் கணக்கே போதுமானது….இதுதான் இதன் தனிச்சிறப்பு. பேஸ்புக்கை நிறுவிய மார்க் சக்கர்பெர்க் படைப்பாளிகளுக்காக கொண்டு வரப்பட்டதுதான் இன்ஸ்டன்ட் ஆர்டிகிள்(Instant Article)

இன்ஸ்டன்ட் ஆர்டிகிள் என்றால் என்ன?

இன்ஸ்டன்ட் ஆர்டிகிள் என்பது உடனடியாக தகவல்களை ஒரு இணையதளத்தில் இருந்து வெகமாக காட்டக்கூடிய ஒரு தொழில்நுட்பம்தான் இன்ஸ்டன்ட் ஆர்டிகிள்.இதன் மூலம் இணையதளத்தில் இருந்து வரும்  தேவையற்ற தகவல்கள் நீக்கப்படும் என்பதே இதன் பிரத்யேக சிறப்பு.

 

இன்ஸ்டன்ட் ஆர்டிகிளில் எப்படி பணம் கிடைக்கும்?

இன்ஸ்டன்ட் ஆர்டிகிளின் தகவல்களுக்கு இடையில் பேஸ்புக் தனது விளம்பரங்களை வைத்து பயனர்களுக்கு காட்டும்.இந்த இன்ஸ்டன்ட் ஆர்டிகிளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை பொருத்து பேஸ்புக் படைப்பாளிகளுக்கு பணம் தரும்.

இன்ஸ்டன்ட் ஆர்டிகிளில் என்னால் சம்பாதிக்க முடியுமா?

இன்ஸ்டன்ட் ஆர்டிகிளில் உங்களால் சம்பாதிக்க முடியும் ஆனால் அதற்க்கு உங்களிடம் இணையதளம் இருக்க வேண்டும் கூடவே ஒரு பேஸ்புக் பேஜ்ஜும் கண்டிப்பாக தேவை.

குறிப்பு:

இந்த் இன்ஸ்டன்ட் ஆர்டிகிள்(instant Article) பேஸ்புக் செயலியில் மட்டுமே செயல்படும்.உலாவியில்(Browser) செயல்படாது. மேலும் இதை setup செய்வது என்பது பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *